திருச்சி மலைக்கோட்டை உச்சிப்பிள்ளையார்
UPDATED : செப் 17, 2012 | ADDED : செப் 17, 2012
திருச்சி என்றாலே மலைக்கோட்டை தான். இந்தக்கோட்டை 6ம் நூற்றாண்டைச்சேர்ந்த குணபரன் என்ற மகேந்திர பல்லவர் ஆட்சியில் கட்டப்பட்டதாக தகவல் உள்ளது. உயரம் 275 அடி. மலைக்கோயிலுக்கு செல்ல 417 படிக்கட்டுகள் உள்ளன. மலை உச்சி மேல் அமைந்துள்ள விநாயகரை 'உச்சிப்பிள்ளையார்' என்கின்றனர். ராமாயண காலத்தில் விபீஷணனுக்காக மலை மேல் இந்த விநாயகர் அமர்ந்ததாக புராணங்கள் கூறுகிறது