சந்தோஷிமாதாவே வருக!
விநாயகருக்கும், சித்தி புத்திக்கும் லாபம், சுபம் என்ற பிள்ளைகள் இருந்தார்கள். ஒருமுறை ரக்ஷாபந்தன் விழாவின் போது, அவரவர் சகோதரிகளுக்கு ரக்ஷை கட்டுவதைப் பார்த்து, தங்களுக்கும் ஒரு சகோதரி வேண்டுமென விநாயகரை வேண்டினர். அவர்களைச் சந்தோஷப்படுத்த பிறந்தவளே சந்தோஷிமாதா. சகோதர உறவுக்குரிய தெய்வம் இவள். சகோதர உறவு நிலைத்திருக்கவும், விரைவில் திருமணம் கைகூடவும் சந்தோஷிமாதா 108 போற்றியை மாலை வேளையில் விளக்கேற்றியதும் பாடுங்கள். சந்தோஷிமாதாவே போற்றிசகலமும் அருள்வாய் போற்றிவேதங்கள் துதிப்பாய் போற்றிவெற்றிகள் தருவாய் போற்றிகன்னியிற் சிறந்தாய் போற்றிகற்பகத்தருவே போற்றிகருணைக்கடலே போற்றிகாரணத்தின் உருவே போற்றிகாரியமும் ஆனாய் போற்றிகாசித்தலம் உறைவாய் போற்றிகதை கேட்டு மகிழ்வாய் போற்றிகாலதேசம் கடந்தாய் போற்றிகஜமுகன் குழந்தாய் போற்றிமுக்குண <உருவே போற்றிமூவுலகிற் சிறந்தாய் போற்றிஇனியதின் உருவே போற்றிஇனிப்பினை விரும்புவாய் போற்றிவாட்டமிலா முகத்தாய் போற்றிவரம் மிகத்தருவாய் போற்றிஅகர முதல எழுத்தே போற்றிஆதி அந்தமில்லாய் போற்றிஈடிணையற்றாய் போற்றிஇணையடி தொழுதோம் போற்றிகோரியது கொடுப்பாய் போற்றிகுலம் காக்கும் சுடரே போற்றிவிரதத்திற்கு உரியாய் போற்றிவிளக்கத்தின் விளக்கமே போற்றிஆனைமுகத்தான் மக@ள போற்றிஆக்கமும் ஊக்கமும் தருவாய் போற்றிபெருவாழ்வு அருள்வாய் போற்றிபிழைகளைப் பொறுப்பாய் போற்றிவணக்கத்திற்குரியாய் போற்றிவணங்கினால் மகிழ்வாய் போற்றிஉயர்வுகள் தருவாய் போற்றிகோள்களும் போற்றும் போற்றிகுறைகளைத் தீர்ப்பாய் போற்றிநிறைவினைத் தருவாய் போற்றிநித்தமும் அருள்வாய் போற்றிசக்தியின் <உருவே போற்றிசரஸ்வதி ஆனாய் போற்றிதிருமகள் வடிவே போற்றிதெய்வத்தின் தெய்வம் போற்றிகுலம் தழைக்க அருள்வாய் போற்றிவாசனை மலரணிந்தாள் போற்றிதீமைகளை அழிப்பாய் போற்றிதிசைகளெட்டும் நிறைந்தாய் போற்றிஅற்புத உருவே போற்றிஆனந்த நிலையே போற்றிதாமரை முகத்தவளே போற்றிதர்மத்தின் வடிவே போற்றிதாயாக வந்தாய் போற்றிதக்கவர்க்கு பொருளருள்வாய் போற்றிநினைத்ததை முடிப்பவளே போற்றிநிம்மதி அருள்வாய் போற்றிஉமையவள் பேத்தியே போற்றிஉன்னதத் தெய்வமே போற்றிசெல்வத்தின் உருவமே போற்றிஜெகமெல்லாம் காப்பாய் போற்றிஉயிருக்கு உயிரானாய் போற்றிஉலகமெல்லாம் நிறைந்தவளே போற்றிஆபரணம் அணிந்தாய் போற்றிஆடைகள் தருவாய் போற்றிஒளிமிகு முகத்தாய் போற்றிஓம்காரப் பொருளே போற்றிகருணைசேர் கரத்தாய் போற்றிமங்களம் தருவாய் போற்றிஉன்னையே துதித்தோம் போற்றிஉடமைகள் தருவாய் போற்றிநங்கையர் நாயகியே போற்றிநலமெலாம் தருவாய் போற்றிஆரத்தி ஏற்பாய் போற்றிஆனந்த உருவே போற்றிபாடல்கள் கேட்டாய் போற்றிபாசத்தைப் பொழிவாய் போற்றிகுணமெனும் குன்றே போற்றிகுங்குமம் தருவாய் போற்றிதேவியர் தேவியே போற்றிசிவனருள் பெற்றாய் போற்றிசிறப்பெலாம்கொண்டாய் போற்றிவிஷ்ணுவரம் பெற்றாய் போற்றிவிண்ணவர் செல்வமே போற்றிநலன்களின் <உருவமே போற்றிபுண்ணிய நாயகி போற்றிசெல்வத்தின் வடிவே போற்றிசெல்வத்தைப் பொழிவாய் போற்றிசரணமடைந்தால் மகிழ்வாய் போற்றிசற்குணவதியே போற்றிஐங்கரன் மகளே போற்றிஅனைத்துமே நீ தான் போற்றிகண்ணுக்கு இமையே போற்றிகருணை செய்து காப்பாய் போற்றிகனகமாமணியே போற்றிகல்வியெலாம் தருவாய் போற்றிசித்திபுத்தி செல்வமே போற்றிசிறப்பெலாம் அருள்வாய் போற்றிதத்துவச் சுடரே போற்றிதக்கவர்க்கு பொருள் அருள்வாய் போற்றிவித்தகச் செல்வியே போற்றிவினைகளெலாம் களைவாய் போற்றிபழங்களை ஏற்பாய் போற்றிபாயாசம் உண்பாய் போற்றிகரும்பாய் இனிப்பாய் போற்றிகாமதேனு பசுவே போற்றிகுடும்ப விளக்கே போற்றிகொலுவிருந்து அருள்வாய் போற்றிசந்தோஷம் தருவாய் போற்றிசவுபாக்கியம் அருள்வாய் போற்றி