தாமரை சொல்லும் சேதி என்ன
* சேற்றில் மலர்ந்த தாமரை போல வாழ்வில் பட்டும் படாமலும் இருங்கள். * ஆன்மிக வாழ்வின் அடிப்படை குணங்கள் உண்மை, அன்பு. * தீமை செய்தவருக்கும் நன்மை செய்ய விரும்புபவனே உத்தமன். * பொறுமையை விட மேலான தவமில்லை. * திருப்தியை விட மேலான இன்பமில்லை. * இரக்கத்தை விட உயர்ந்த தர்மமில்லை. * மன்னித்தலை விட ஆற்றல் மிக்க ஆயுதமில்லை. * தன்னுடைய குறைகளை மறைப்பவன் பார்வை இல்லாதவனுக்குச் சமம். * மன்னிக்கும் பெருந்தன்மை கொண்டவன் மனதில் கடவுள் குடியிருக்கிறார். * மரம் தனக்காக பழுப்பதில்லை. அது போல சான்றோரும் தனக்காக வாழ்வதில்லை. * மனத்துாய்மை இல்லாமல் கடவுளின் பெயரை ஜபிப்பதால் பயனில்லை. * கோபத்தை விட்டு விடுங்கள். இல்லையேல் உங்களை அது கொன்றுவிடும். * உள்ளத்தில் அமைதியின்றி வெளியில் அமைதியாக இருப்பது போல் நடிக்க கூடாது. * தர்மம் என்னும் நீரில் நீராடி, வாய்மை என்னும் வாசனைத் திரவியத்தை பூசுங்கள்.சொல்கிறார் குருநானக்