உள்ளூர் செய்திகள்

பலன் தரும் பத்து வழிபாடு

பசுவை ஒருமுறை வலம் வந்து வணங்கினால், உலகிலுள்ள புனித தீர்த்தங்கள், திருத்தலங்கள் அனைத்தையும் வழிபட்ட புண்ணியம் கிடைக்கும். தெய்வ வடிவான பசுவை மகாலட்சுமியின் அம்சமாக கருதி, கோவில்களில் தினமும் காலையில் கோபூஜை நடத்துவர். பசுவை பத்து விதங்களில் வழிபடலாம் என சாஸ்திரம் கூறுகிறது. கண்ணால் பார்த்தல், கையால் தொடுதல், பூக்களால் அர்ச்சித்தல், மந்திரம் ஜபித்தல், குளிப்பாட்டுதல், வர்ணம் தீட்டி அலங்கரித்தல், மஞ்சள், குங்குமம் பூசுதல், கீரை உண்ணக் கொடுத்தல், வலம் வருதல், வணங்குதல் ஆகிய பத்தும் இதில் அடங்கும். லட்சுமி வழிபாட்டுக்குரிய தீபாவளியன்று, இதில் இயன்றதைச் செய்தாலே கோபூஜை செய்த பலன் கிடைத்து விடும்.