லட்சுமியை வரவேற்கும் விழா
UPDATED : அக் 27, 2016 | ADDED : அக் 27, 2016
விளக்கேற்றாத வீடுகளில் செல்வம் தங்காது என்பது ஐதீகம். எனவே தான் தினமும் மாலையில் விளக்கேற்றுகிறார்கள். தீபாவளியன்று அதிகபட்ச விளக்குகளை ஏற்ற வேண்டும். ஏனெனில் நாம் குளிக்கும் எண்ணெய்யில் லட்சுமி வாசம் செய்ய வருகிறாள். அவளை வரவேற்று, நிரந்தரமாக நம் வீட்டில் தங்கும் வகையில் அன்று மாலை விளக்கேற்றி பூஜை செய்ய வேண்டும். குபேர லட்சுமி படம் வைத்தும் வணங்கலாம். அப்போது இனிப்பு நைவேத்யம் செய்ய வேண்டும். இப்படி செய்தால் செல்வவளம் பொங்கும் என்பது நீண்டகால நம்பிக்கை.