கங்கா ஸ்நானம் ஆச்சா!
UPDATED : அக் 25, 2024 | ADDED : அக் 25, 2024
தீபாவளியன்று குளிக்கும் நீரில் கங்காதேவி ஐக்கியமாகி இருக்கிறாள். இதனால் கங்கையில் நீராடிய புண்ணியத்தை வீட்டில் குளித்தாலும் பெற முடியும். இதனடிப்படையில் ஒருவருக்கொருவர் 'கங்கா ஸ்நானம் ஆச்சா' என்று கேட்கும் வழக்கம் தீபாவளியில் உண்டானது. முற்றும் துறந்த துறவிக்கும் தீபாவளி குளியல் அவசியம். கங்கா ஸ்நானம் செய்வதால் பாவம் நீங்கி மனமும், உடலும் புனிதம் பெறுகிறது.