கந்தமாதன பர்வதம்
UPDATED : மே 17, 2024 | ADDED : மே 17, 2024
திருச்செந்துாரில் பழங்காலத்தில் முருகனின் சன்னதியை மணற்குன்றுகள் சூழ்ந்திருந்தன. அவற்றுள் பெரிய மணற்குன்று 'கந்தமாதன பர்வதம்' என அழைக்கப்பட்டது. நாளடைவில் மணற் குன்றுகள் மறையவே பிரகாரங்கள் கட்டப்பட்டன. வடக்குப் பக்கத்தில் மணற்குன்றே மதில்சுவராக இருப்பதை காணலாம். இதன் தாழ்வரையில் ரங்கநாதப் பெருமாள் பள்ளி கொண்ட நிலையில் இருக்கிறார்.