நான்கில் ஒன்று
UPDATED : மே 24, 2024 | ADDED : மே 24, 2024
சைவம், வைணவத்தை இணைக்கும் பாலம் ராமேஸ்வரம். மூர்த்தி, தலம், தீர்த்தம் என சிறப்பு மிக்க கோயில் இது. ராமர் வழிபட்ட ராமநாத சுவாமி மூலவராக இருக்கிறார். ஜோதிர் லிங்கத் தலங்களில் தமிழகத்தில் அமைந்த ஒரே தலம் இது. இங்குள்ள கடல் அக்னி தீர்த்தம் எனப்படுகிறது. இதை தவிர கோயிலுக்குள் 22 தீர்த்தங்கள் உள்ளன. மதுரை மீனாட்சி அம்மனைப் போல இங்குள்ள பர்வதவர்த்தினி அம்மன் சுவாமிக்கு வலதுபுறத்தில் இருப்பதால் சக்தி மிக்க தலமாக உள்ளது. இந்தியாவில் கிழக்கே பூரியும், மேற்கே துவாரகையும், வடக்கே பத்ரிநாத்தும், தெற்கே ராமேஸ்வரமும் புகழ் மிக்கவை. இவற்றில் ராமேஸ்வரம் சிவத்தலமாகவும், மற்றவை விஷ்ணு தலங்களாகவும் உள்ளன.