உள்ளூர் செய்திகள்

சங்கடம் இனியில்லை

விநாயகருக்கு ஏற்றது சதுர்த்தி திதி. 'சதுர்த்தீ பூஜன ப்ரியாய நம' என சகஸ்ர நாமாவளி விநாயகரை போற்றுகிறது. வளர்பிறை சதுர்த்தியில் வழிபட்டால் நன்மைகளை வழங்குவார். தேய்பிறை சதுர்த்தியில் வழிபட்டால் சங்கடங்களைப் போக்குவார். 'ஹர' என்றால் போக்குதல். சங்கடங்களைப் போக்குவதால் சங்கடஹர சதுர்த்தி ஆயிற்று. தேய்பிறை சதுர்த்தியே சங்கடஹர சதுர்த்தி. அசுரர்களால் துன்பப்பட்ட தேவர்கள் சங்கடஹர சதுர்த்தி பூஜை செய்து விநாயகரை வழிபட்டனர். இதன்பின் அசுரர்களை அழித்து தேவர்களைக் காப்பாற்றினார் விநாயகர். கடன், நோய், வேலையின்மை, திருமணத்தடை, குழந்தையின்மை போன்ற சங்கடங்களை போக்க வல்லது சங்கடஹர சதுர்த்தி விரதம்.