உள்ளூர் செய்திகள்

சனிப்பெருக்கு தானம்

புரட்டாசி சனியை 'சனிப்பெருக்கு' என்று சிறப்பாக சொல்வர். இந்நாளில் 'பஞ்ச லட்சுமி திரவியம்' தானம் செய்தால் வீட்டில் செல்வம் பெருகும். பால், தேன், தாமரை, தானியம், நாணயம் ஆகியவற்றை 'பஞ்சலட்சுமி திரவியம்' என சொல்வர். இவற்றை புரட்டாசி சனியன்று தானம் அளிக்க லட்சுமி மனம் குளிர்வாள். பாலைக் குழந்தைகளுக்கும், தாமரையைக் கோயில் வழிபாட்டுக்கும், தேனை பெண்களுக்கும், தானியத்தைப் பறவைகளுக்கும், நாணயத்தை ஏழைகளுக்கும் தானமாகத் தர வேண்டும்.