கந்த சுக்கிர வார விரதம்
UPDATED : செப் 30, 2016 | ADDED : செப் 30, 2016
முருகனுக்குரிய கிழமைகள் செவ்வாய், வெள்ளி. இதில் வெள்ளியன்று விரதமிருந்து முருகனை வழிபட்டால் செல்வவளம், வெற்றி, ஆரோக்கியம் கிடைக்கும். இதை 'கந்த சுக்கிர வார விரதம்' என்பர். ஐப்பசி முதல் வெள்ளிக்கிழமையில் தொடங்கி, ஒவ்வொரு வெள்ளியும் மூன்று ஆண்டுகள் இந்த விரதத்தை மேற்கொள்ள வேண்டும். இந்நாட்களில் 'ஓம் சரவணபவ' என்னும் மந்திரத்தை 108 முறை ஜெபிக்க வேண்டும்.