தானம் செய்ய நல்ல நாள்
UPDATED : பிப் 16, 2022 | ADDED : பிப் 16, 2022
மாசிமகத்தன்று புனித நதிகளில் நீராடி தானம் செய்தால் போதும். இந்த விரதத்துக்கே 'தான விரதம்' என்று பெயர். கும்பகோணம் மகாமகக் குளக்கரையில் அந்த காலத்தில் அந்தணர்களுக்கு தங்கம், நவரத்தினங்களை தானமாக வழங்கினர். இன்றைய சூழலில் ஏழைகளுக்கு தாலிக்கு தங்கம், கல்வி நிதி, மருத்துவச்செலவு போன்ற தானங்களைச் செய்யலாம். ஐந்தெழுத்து மந்திரமான நமசிவாய, சிவாயநம ஆகியவற்றை இந்நாளில் 1008 முறை சொன்னால் செல்வவளமும், பிறப்பற்ற நிலையும் கிடைக்கும் என்பது ஐதீகம்.