பெருமாளின் திருப்பாதம்
UPDATED : செப் 23, 2022 | ADDED : செப் 23, 2022
திருப்பதி பெருமாளை தரிசிக்க மலைப்பாதையில் நடந்து சென்றால், முதலில் நாம் காண்பது ஸ்ரீபாத மண்டபம்தான். இதற்கு ஏன் இப்பெயர் வந்தது தெரியுமா? தனது வாழ்நாளை பெருமாளுக்கே அர்ப்பணித்தவர் ராமானுஜர். இவரது தாய்மாமனான திருமலை நம்பி என்பவர் தினமும் அடிவாரத்தில் இருந்து தண்ணீர் கொண்டு சென்று, பெருமாளுக்கு பூஜை செய்து வந்தார். ஒருநாள் இவரும், ராமானுஜரும் ராமாயணம் குறித்து ஆர்வமாக பேசிக்கொண்டிருந்தனர். இதனால் உச்சிக்கால பூஜை நேரத்தை தவற விட்டு விட்டார் நம்பி. பெருமாளுக்கு கைங்கர்யம் செய்யாமல் போய்விட்டதே என்று வருந்தினார். அவ்வளவுதான் பக்தரின் வேதனையை போக்க அடிவாரத்திற்கு ஓடி வந்தார் பெருமாள். திருமலை நம்பிக்கு நின்று தரிசனம் கொடுத்த இடத்தில் இரண்டு திருப்பாதங்களை காணலாம்.