ரவை ஸல்லா
UPDATED : செப் 02, 2012 | ADDED : செப் 02, 2012
'ரவை ஸல்லா'- ஏதாவது புதுவகை பதார்த்தத்தின் பெயரோ என எண்ணி விடாதீர்கள். அந்தக்காலத்தில் திருப்பதி கோயிலில் கருவறை சுத்தமாக இருக்கவேண்டும் என்பதற்காக மன்னர்கள் ஏற்படுத்தியதே 'ரவை ஸல்லா கட்டளை'. மென்மையான டாக்கா மஸ்லின் துணிக்கு 'ரவை ஸல்லா' என்று பெயர். மல்லிகைப்பூ மாதிரி வெண்ணிறம் கொண்ட இத்துணியால் கருவறையை மெழுகுவதற்கு ஏற்பாடு செய்திருந்தனர். முதலில் தடிமனான பழைய துணிகளால் தரையைத் துடைத்துவிட்டு, பின் ரவை ஸல்லாவால் துடைப்பார்கள். அப்போது, அதில் துளி அழுக்கு கூட படியக் கூடாது. அப்படி படிந்தால் மீண்டும் துடைக்க வேண்டும். இதை சரிபார்க்க மணியக்காரர்ஒருவரும் நியமிக்கப்பட்டிருந்தார்.