உலக நலனுக்காக ருத்ர மஹாயாகம்
UPDATED : மே 08, 2022 | ADDED : மே 08, 2022
உலக நலனுக்காகவும், நோயின்றி வாழவும், படிப்பில் சிறக்கவும், நல்ல மணவாழ்வு, குழந்தைப்பேறு, நீண்ட ஆயுள், சுமங்கலி பாக்கியம் பெறவும் மயிலாடுதுறை சிவபுரம் கல்வி அறக்கட்டளை சார்பில் யாகம் நடக்கிறது. இதில் ருத்ர மஹாயாகம், லலிதா சஹஸ்ரநாம பாராயணம் செய்யப்படும். ஆன்மிக மலர் 'கேளுங்க சொல்கிறோம்' பகுதிக்கு பதிலளிக்கும் ஏ.வி.சுவாமிநாத சிவாச்சாரியார் 2022 ஏப்.1 முதல் யாகத்தை நடத்துகிறார். ரூ.1000 செலுத்துவோருக்கு குடும்பத்தினரின் (அதிகபட்சம் 10 நபர்) பெயர், நட்சத்திரம் சொல்லி சங்கல்பம் செய்து பிரசாதம் அனுப்பப்படும். தொடர்புக்கு: 88258 63586