உணவில் உப்பும் வருண ஜபமும்
UPDATED : ஜூன் 10, 2022 | ADDED : ஜூன் 10, 2022
உணவின் ருசி உப்பை பொறுத்து தான் அமையும். 'உப்பில்லா பண்டம் குப்பையிலே' என்றொரு பழமொழி உண்டு. உணவில் உப்பை குறைப்பது அவசியம். உப்புச்சத்து வந்த பின், உப்பின் அளவைக் குறைக்கலாம் என நினைப்பது கூடாது. கார்த்திகை, சஷ்டி, பவுர்ணமி போன்ற விரத நாட்களில் உப்பு இல்லாமல் சாப்பிடுவது நல்லது. இதற்கு 'அலவண நியமம்' (உப்பில்லா கட்டுப்பாடு) என்று பெயர். 'லவணம்' என்பதற்கு 'உப்பு' என்பது பொருள். உப்பில்லாத உணவைச் சாப்பிட்டு வருண மந்திரம் ஜபித்தால் மழை பெய்யும் என்கிறார் காஞ்சி மஹாபெரியவர்.