சரஸ்வதியின் சிற்பம்
UPDATED : அக் 04, 2022 | ADDED : அக் 04, 2022
பல்லவர் காலத்தில் ராஜசிம்மனால் எழுப்பப்பட்டது காஞ்சி கைலாச நாதர் கோயில். இங்கு மூன்று இடங்களில் சரஸ்வதியின் சிற்பம் இடம் பெற்றுள்ளது. இதில் இரு சிற்பங்களில் வலக் கரங்களில் ஸ்படிக மாலையும் (அட்சமாலை), தியான முத்திரையும், இடக்கரங்களில் கமண்டலமும் ஓலைச்சுவடியையும் தாங்கி இருக்கின்றாள். மூன்றாவது சிற்பத்தில் வலக்கரங்களில் அட்சமாலையும் அபய முத்திரையும் இடக்கரங்களில் கமண்டலமும், தாமரையும் ஏந்தியுள்ளாள்.