என்றும் வாழும் ஏழு பேர்
UPDATED : பிப் 24, 2017 | ADDED : பிப் 24, 2017
சுயநலமற்ற சேவை காரணமாக அனுமனும், சகோதரன் என பாராமல் நியாத்தின் பக்கம் நின்றதற்காக விபீஷணனும், தன் உயிரையே இறைவனிடம் அர்ப்பணித்ததால் மகாபலியும், சிவன் மீது கொண்ட உண்மை பக்தி காரணமாக, எமனையே வென்றதால் மார்க்கண்டேயரும், மகாபாரதம் என்னும் அழியாகாவியத்தை எழுதி அதைப் படிப்போரின் பாவங்களைப் போக்கிய வியாசரும், கடமையில் இருந்து விலகாமல், தந்தை சொல்லுக்காக தாயையே கொன்றதால் பரசுராமரும், கடைசி வரை கட்சி மாறாமல், கவுரவர்களுக்காக தனது வீரத்தைக் காட்டியதால், துரோணரின் மகன் அஸ்வத்தாமனும் சிரஞ்சீவி (என்றும் அழியாமல் வாழ்பவர்கள்) என்னும் நிலை பெற்று இன்றும் வாழ்வதாக புராணங்கள் சொல்கின்றன.