பொய் சொல்லாதவள்
UPDATED : அக் 04, 2022 | ADDED : அக் 04, 2022
விழுப்புரம் மாவட்டத்தில் உள்ள சிவத்தலங்களில் முக்கியமானது திருவாமத்துார் கோயில். சம்பந்தர், அப்பர், சுந்தரர், அருணகிரிநாதர், தண்டபாணி சுவாமிகளால் பாடல் பெற்ற ஸ்தலம் இது. இத்தல சிவபெருமான் மீது இரட்டை புலவர்கள் (இளஞ்சூரியர், முதுசூரியர்) திருவாமத்துார் கலம்பகம் என்ற நுாலை இயற்றியுள்ளனர். அதில் ஆற்றின் கிழக்கு கரையில் அமைந்திருக்கும் கோயிலை மேற்கு கரையில் அமைந்திருப்பதாக பாடி இருப்பர். நுால் அரங்கேற்றத்தின் போது இத்தவறை அவையோர்கள் சுட்டிக்காட்ட, அதற்கு புலவர்கள் ''என்நாவில் உள்ள கலைமகள் பொய் சொல்ல மாட்டாள்'' என பதில் அளித்தனர். புலவர்களின் வாக்கை மெய்ப்பிக்க கலைமகள் அருளால் அன்றிரவு கடுமையான மழை பெய்து, ஆற்றின் போக்கு திசைமாறியது. அவளின் கருணைக்கு ஈடு இணை உண்டோ!