கேரளத்தில் வெடி வழிபாடு
UPDATED : அக் 27, 2016 | ADDED : அக் 27, 2016
கேரளாவிலுள்ள சில அம்மன் கோவில்களில் வெடி வழிபாடு செய்வதுண்டு. அம்பாளை மனதில் நினைத்து ஒரு சிறிய வெடியை வெடிக்கச் சொல்வார்கள். வெடிச்சத்தம் கேட்டால் மிருகங்கள் மிரண்டு ஓடி விடும். அதே போல தங்களைப் பிடித்துள்ள தீய சக்திகளையும், அம்பாள் விரட்டி அடிப்பாள் என்ற ஐதீகத்தின் பேரில் வெடி வழிபாடு செய்யும் வழக்கம் வந்தது.