உள்ளூர் செய்திகள்

அகந்தை உடையவன் தாழ்நிலையை அடைவான்

* உண்மை, பொறுமை, அமைதி மிக்க நல்லவர்களின் சொல்லுக்கு சக்தி அதிகம். இவர்கள் சொன்னது அப்படியே பலிக்கும்.* ஆசை இருக்கும் வரை மனிதனைப் பிறவிப்பிணி தொடரும். ஆசையற்ற நிலையில் ஜீவன் முக்தி அடைந்து விடும். * தாயும், தந்தையுமே கண்கண்ட தெய்வங்கள். அவர்களுக்கு பிள்ளைகள் உதவி செய்ய வேண்டியது கடமை. * தனக்கும் பிறருக்கும் மகிழ்ச்சி தரும் செயல்களில் மனிதன் ஈடுபட வேண்டும். * திருப்தியுடன் வாழ்வதை விட மேலான செல்வம் வேறில்லை. நல்லவர்கள் புகழும் விதத்தில் நம் வாழ்வு அமைய வேண்டும். * அடக்கமுடையவன் வாழ்வில் படிப்படியாக உயர்வான். அகந்தை உடையவன் படிப்படியாக தாழ்நிலையை அடைவான்.* சுகத்தை அனுபவிக்க புண்ணியத்தை விதையுங்கள். நற்செயல்களில் ஈடுபட்டால் அது மரம் போல வளர்ந்து நமக்கு நிழல் கொடுக்கும். ஜெயேந்திரர்