நல்லவர்களாக இருங்கள்
UPDATED : செப் 30, 2016 | ADDED : செப் 30, 2016
* தானும் வாழ்ந்து, மற்றவர்களும் வாழ கடவுளிடம் பிரார்த்தனை செய்பவர்களே நல்ல மனிதர்கள்.* வாரம் ஒருமுறை விரதம் மேற்கொள்வது நல்லது. இதனால் உடலும், உள்ளமும் ஆரோக்கியம் அடைகிறது.* பணிபுரியும் நேரத்திலும் சிறிது நேரம் கடவுள் சிந்தனையில் மனதை ஈடுபடுத்துங்கள்.* சுற்றியுள்ள மனிதர்களிடம் நாம் அன்பு காட்டினால் கடவுள் நம் மீது அருளைப் பொழிவார்.* வழிபாட்டால் விதியின் கடுமையைக் குறைக்க முடியும். ஆனால் அதிலிருந்து தப்பிக்க முடியாது.* சத்தியம் ஒன்றே உலகில் நிலையானது.- ஜெயேந்திரர்