உள்ளூர் செய்திகள்

பிறருக்கு கொடுத்து மகிழுங்கள்

* தோல்வி வந்தாலும் மனம் துவளாமல் மீண்டும் முயற்சியில் ஈடுபடுபவனே வெற்றியாளன். * முடிந்தால் பிறருக்கு கொடுத்து மகிழுங்கள். ஆனால், மறந்தும் பிறர் கொடுப்பதை தடுக்காதீர்கள். * மனதாலும் பிறருக்கு தீங்கு நினைக்க கூடாது. விளையாட்டாகக் கூட பொய் பேசக்கூடாது. * நெற்றிக்கு அழகு சேர்ப்பது திருநீறு. அதைப் பூசுவதால் அழகும், அறிவும் உண்டாகும். * சிறந்த நுால்கள் நல்ல நண்பர்களைப் போல் நமக்கு நன்மை தரும். * கடவுள் இருக்கிறாரா இல்லையா என்ற சந்தேகம் இல்லாமல் இருப்பதே பக்தி. * அதர்மம் அதிகரிக்கும் போது கடவுளின் அவதாரம் மண்ணில் நிகழும். ஜெயேந்திரர்