திருப்தியுடன் வாழ பழகுங்கள்
UPDATED : பிப் 02, 2016 | ADDED : பிப் 02, 2016
* போதும் என்ற மனதுடன் திருப்தியுடன் வாழுங்கள். பேராசை நம்மை துன்பத்தில் தள்ளி விடும்.* மனிதன் பழி பாவத்திற்கு அஞ்சி நடக்க வேண்டும். குற்றமில்லாத வாழ்வே உயர்வுக்கு வழிவகுக்கும்.* கற்ற நல்ல விஷயங்களை மறப்பது கூடாது. அடிக்கடி ஞாபகப்படுத்திக் கொள்வதே அறிவுடைமை.*பிறருக்கு அடிமையாக வாழ்வதைக் காட்டிலும் கொடிய நரகம் வேறு கிடையாது.*நல்லவர்களின் நட்பினால் வாழ்வில் எல்லா நன்மைகளையும் பெற்று வாழலாம்.* இளமை, செல்வம், ஆயுள் இவையெல்லாம் நிலைத்து நிற்பதில்லை. செய்த தர்மத்தின் பயன் என்றென்றும் நிலைத்திருக்கும்.ஜெயேந்திரர்