கோமாதாவை வணங்குவோம்
UPDATED : ஜன 12, 2017 | ADDED : ஜன 12, 2017
* பாலைக் கொடுக்கும் பசுவை தாயாகக் கருதி 'கோமாதா' என்று வழிபாடு செய்கிறோம். பசுவைத் தரிசிப்பது சுபசகுனம்.* பசு புனிதமானது. கோதூளி என்னும் பசுவின் திருவடி பட்ட தூசு நம் மீது பட்டால் பாவம் அனைத்தும் ஓடி விடும்.* தீட்டு உள்ளவர்கள், கோதூளியை (பசுவின் குளம்பிலிருந்து கிளம்பும் தூசு) உடம்பில் பூசிக் கொண்டால் புனித நீராடிய பலன் உண்டாகும்.* எல்லா தேவதைகளும் பசுவின் உடம்பில் குடியிருப்பதால் பசுவை வணங்கினால் அவர்களின் அருள் கிடைக்கும்.- ஜெயேந்திரர்