படித்தால் பலனுண்டு
UPDATED : ஜூலை 20, 2016 | ADDED : ஜூலை 20, 2016
* சமஸ்கிருத ஸ்லோகம், ஸ்தோத்திரங்களை பொருள் புரியாமல் படித்தாலும் அதற்குரிய நற்பலனைக் கொடுக்கும்.* ஒருவன் செய்த தர்மம் உயிரையே காக்கும். இதனால் தான் அவ்வையார் 'அறம் செய விரும்பு' என்று வலியுறுத்தியுள்ளார்.* தீபம் ஏற்றக் கூட வழியில்லாமல் இருக்கும் பழைய கோவில்களுக்கு பொருளுதவி செய்யுங்கள்.* தீய கனவுகளைத் தவிர்க்க துாங்கச் செல்லும் முன் கடவுளின் திருநாமத்தை ஜெபியுங்கள்.* நல்லோர்களின் மனம் வருந்தும் செயலில் ஈடுபடுவது கூடாது.- ஜெயேந்திரர்