உள்ளூர் செய்திகள்

வெற்றி உங்களுக்கே!

* பக்தியும், பணிவும் கொண்டவர்கள் வெற்றியாளர்களாக விளங்குவர்.* கடவுளிடம் பக்தி செலுத்தவே நாம் மண்ணில் மனிதர்களாகப் பிறந்திருக்கிறோம்.* எல்லா உயிர்களின் மீது அன்பு காட்டினால், கடவுள் நம் மீது அருளை வாரி வழங்குவார்.* தர்மம் தலை காக்கும். அவரவர் நிலைக்கு ஏற்ப தினமும் தர்மம் செய்வது அவசியம்.* ஆன்மிகத்தில் ஈடுபட்டால் கோபம், மன இறுக்கம், விரக்தி ஆகியவை நெருங்காது.* 'நான்' என்னும் குறுகிய நிலையில் இருந்து 'நாம்' என்னும் பரந்த நிலைக்கு வருவதே இன்பம்.- ஜெயேந்திரர்