ஆன்மிகத்தின் அடிப்படை
UPDATED : ஜன 01, 2016 | ADDED : ஜன 01, 2016
*சாஸ்திரம் என்னும் அடிப்படையின் மீதே ஆன்மிகம் என்னும் விசாலமான அரண்மனை அமைக்கப்பட்டுள்ளது.*ஆன்மிக விஷயங்களை மூடநம்பிக்கை என்று புறக்கணிப்பது கூடாது. அவற்றின் உண்மையான பொருள் நம் சிற்றறிவுக்கு எட்டுவதில்லை.*கடவுளைப் பூரணமாக அறிந்த ஞானிகள் மட்டுமே சாஸ்திரக் கோட்பாடுகளில் இருந்து விதிவிலக்கானவர்கள். மற்றவர்கள் சாஸ்திர அடிப்படையில் வாழ்வது அவசியம்.* மனிதன் பிறருக்கு உதவி செய்து வாழ வேண்டும். இதனால் மனநிறைவும், துாய்மையும் உண்டாகும்.-ஜெயேந்திரர்