உள்ளூர் செய்திகள்

நேரத்தை வீணாக்காதீர்

* வீண் பொழுதுபோக்கில் நேரத்தை செலவழிப்பதை தவிர்த்து சேவையில் ஈடுபடுவது அவசியம்.* பிறருக்குச் செய்வது மட்டுமில்லாமல், குடும்ப நன்மைக்காகப் மனிதன் பாடுபடுவதும் ஒருவித சேவையே.* சுயநலத்துடன் வாழாமல் பிறருடைய துன்பம் தீர்க்க முயல்பவனுக்கே கடவுளின் அருள் கிடைக்கும்.* மனித வாழ்வில் அடையும் பாக்கியங்களில் சிறந்தது, பிறருக்கு சேவை செய்து வாழ்வது ஒன்றே.* நிறைவேறாத ஆசைகளே, கோபம், வருத்தம் என்னும் இரு நிலையில் பேச்சில் வெளிப்படுகிறது.-காஞ்சிப்பெரியவர்