உள்ளூர் செய்திகள்

இறைவனுக்கு மனசு கேட்காது

* பக்தி செலுத்துவதால் முக்தி கிடைத்துவிடும் என்றால், நாம் செலுத்தும் பக்தியே நேராக முக்தியைக் கொடுத்துவிடுகிறது என்று அர்த்தமில்லை. நாம் செய்யும் செயல் எதுவுமே தானாக எந்தப் பலனையும் தருவதில்லை. பலன்களைத் தருபவர் ஈஸ்வரனாகவே இருக்கிறார். * பாவ புண்ணியம் பார்த்து அனைவருக்கும் அனைத்து பலன்களையும் ஈஸ்வரன் முறையாக வழங்குகிறார். நாம் செலுத்தும் பக்திக்குப் பலனாக அருளை வழங்குவதுடன், ஞானத்தின் பலனாக மோட்சத்தையும் வழங்குகிறார். பலன் தருவது நாம் செய்யும் பக்தியே அல்ல. அதற்குப் பதிலாக ஈஸ்வரன் அளிக்கும் அருள் தான் பலனைத் தருகிறது.* பக்தி நிஜமானதாக இருந்தால் பக்தன் பலனை எதிர்பார்க்க மாட்டான். எதிர்பார்ப்பு இருந்தால் அது வியாபாரம் தானே தவிர பக்தியில்லை. இப்படி பலன் வேண்டாம் என்றால் நிஜமான பக்தியைப் பெற்றுக் கொண்ட இறைவனுக்கு மனசு கேட்காது. அதனால் அருளை அளிப்பதுடன், ஞானத்தையும் அருள்வான். பக்தனை உலக வாழ்விலிருந்து விடுவித்து வீடு பேறும் அருள்வான்.- காஞ்சிப்பெரியவர்