உள்ளூர் செய்திகள்

பலன் தருவது அவனே!

* சத்தியம் என்றால் வாக்கும், மனசும் ஒன்றுபடுவது மட்டுமல்ல. நல்ல மனசிலே தோன்றுகிற நல்ல எண்ணங்களை வாக்கில் சொல்வதே சத்தியம். நல்ல விளைவுகளை உண்டாக்குவதே சத்தியம்.* இறைவனை நினைத்துச் செய்யும் எந்தக் காரியத்துக்கும் பயன் உண்டு. அறியாமல் செய்தால் கூட அதற்கும் பயன் உண்டு.* நாம் நிலையாக நிற்க வேண்டுமானால் அசையாத ஒன்றைக் கெட்டியாகப் பிடித்துக் கொள்கிறோம். அதேபோல் மனம் தியானத்தில் நிலைத்து நிற்க வேண்டுமானால், அசையாத மரக்கட்டை போன்ற பரம்பொருளை நினைத்துக் கெட்டியாகப் பிடித்துக் கொள்ள வேண்டும்.* ஒவ்வொரு மனிதனிலும் ஈஸ்வரன் தான் குடி இருக்கிறார். ஒருவரை நமஸ்கரிக்கும் போது அந்த ஈஸ்வரனையே வழிபடுவதாகத் தான் அர்த்தம்.* பாவ சிந்தனைகளைப் போக்கிக் கொள்ளப் புண்ணியமான நினைப்புகளை வளர்த்துக் கொள்ள வேண்டும்.* நீ தர்மங்களைச் செய்தால் பலன் எதிர்பார்க்காமல் செய்ய வேண்டும். பலன் கொடுக்க வேண்டியது ஈஸ்வரன் வேலையாகும்.- காஞ்சிப்பெரியவர்