நியாயப்படி நடப்போம்
UPDATED : ஜூலை 19, 2013 | ADDED : ஜூலை 19, 2013
* எண்ணம், சொல், செயல் மூன்றாலும் பிறருக்கு நன்மையைச் செய்வது சத்தியம். பிறருக்கு கெடுதல் செய்யும் அனைத்துமே அசத்தியம்.* நடிகன் பலவேடத்தில் நடித்தாலும், இருப்பது ஒரே ஆள் தான். அதுபோல, உயிர்கள் எத்தனையோ இருந்தாலும், அவற்றின் உள்ளிருந்து இயக்குபவன் கடவுள் ஒருவனே.* நாம் எல்லாருமே கடவுளின் குழந்தைகள். அப்படியானால், மனிதர்கள் அனைவருமே சகோதர சகோதரிகள் என்றாகிறது.* நதிகளை அரவணைக்கும் கடல்போல, பக்தர்களை அரவணைக்க கடவுள் காத்திருக்கிறார்.* ஆசையை நிறைவேற்ற நியாயமான வழியில் செல்லுங்கள். எப்படியாவது அடைந்தால் போதும் என அநியாய வழியில் செல்பவன் பாவத்தை தேடிக் கொள்கிறான்.* மகிழ்ச்சியாக இருக்க ஒரே வழிதான் உண்டு. உண்மையாக இருக்கும் கடவுளின் திருவடியைப் பிடித்துக் கொள்ளுங்கள். உண்மையானவர் கடவுள் மட்டுமே.- காஞ்சிப்பெரியவர்