நியாயவழி நடப்போம்
UPDATED : மார் 10, 2014 | ADDED : மார் 10, 2014
* நியாயம் என்றால் முறை என்று பொருள். எந்தச் செயலையும் முறையுடன் செய்ய வேண்டும். தவறினால் துன்பத்திற்கு ஆளாக நேரிடும்.* மனதிற்கு தோன்றுவதை எல்லாம் செய்வது கூடாது. எல்லோருக்கும் சரியானதை மட்டும் செய்வதே நியாயம்.* விருப்பு வெறுப்புடன் செய்யும் எந்த செயலும் நம்மை பாவத்தில் தள்ளிவிடும். அவரவர்க்குரிய கடமையை விருப்பு வெறுப்பின்றி செய்வது அவசியம்.* விருப்பு வெறுப்பில்லாமல் செய்யும் செயல் அனைத்தும் அனைவருக்கும் பயனுள்ளதாக அமையும். - காஞ்சிப்பெரியவர்