கண்ணியமாக நடப்போம்
UPDATED : ஜன 14, 2016 | ADDED : ஜன 14, 2016
* யாரையும் அலட்சியப்படுத்தும் மனப்பான்மை கூடாது. அனைவரிடமும் கண்ணியத்துடன் நடக்க வேண்டும்.* மனதில் எழும் ஆசைகளை சீர்படுத்திக் கொள்ள வேண்டும். தேவைகளை அதிகப்படுத்திக் கொள்வது கூடாது.* குடும்பக் கடமையைச் சரிவர நிறைவேற்றாமல், பெருமைக்காக சமூக சேவையில் ஈடுபடுதல் கூடாது.* போட்டி மனப்பான்மை இருக்கும் வரையில் யாருக்கும் மனநிறைவும், மகிழ்ச்சியும் உண்டாகாது.* கடவுளை நினைத்துச் செய்யும் எந்தச் செயலுக்கும் பயன் அதிகம். அறியாமல் செய்தாலும் அதற்கும் பலன் அளிக்கிறார்.-காஞ்சிப்பெரியவர்