நியாயத்தைப் பின்பற்றுவோம்
UPDATED : செப் 30, 2016 | ADDED : செப் 30, 2016
* நியாயம் என்பதற்கு 'முறையாக நடத்தல்' என பொருள். பெரியவர்கள் காட்டிய வழிமுறையைப் பின்பற்றுவதே நியாயம்.* பணம், பேச்சு, செயல் இந்த மூன்று விஷயத்திலும் மனிதன் அளவு மீறாமல் கணக்காக இருக்க வேண்டும்.* 'என் கடன் பணி செய்து கிடப்பதே' என்பதை வாழ்வின் குறிக்கோளாக பின்பற்றி நடப்பது அவசியம்.* ஆசை என்ற பெயரில் அவசியமற்ற செயலில் ஈடுபட வேண்டாம்.- காஞ்சிப்பெரியவர்