உள்ளூர் செய்திகள்

எளிய வாழ்வுக்கு திரும்புவோம்

* வாழ்க்கையில் நாம் அனுபவிப்பது அனைத்தையும் இறைவனுக்குச் சமர்ப்பித்த பிறகே பயன்படுத்த வேண்டும்.* மனிதனாகப் பிறந்தவனுக்கு எவ்வளவோ பாக்கியங்கள் உண்டு, அனைத்து பாக்கியங்களிலும் மேலான பாக்கியம் பிறருக்குச் சேவை செய்வதே.* அன்பாக இருப்பது தான் தர்மம் என்பதால் 'அன்பே சிவம்' என்கின்றனர். எனவே, அனைவரும் அன்புடன் செயல்பட ஆசைப்பட வேண்டும்.* புத்தியைச் சுத்தப்படுத்த கல்வி, மனதைச் சுத்தப்படுத்த தியானம், வாக்கைச் சுத்தப்படுத்த ஸ்லோகம் போன்றவை உள்ளன. அவற்றை முறையாக பயன்படுத்தி இந்த நன்மைகளைப் பெற வேண்டும்.* பழைய எளிய வாழ்க்கை முறைக்குத் திரும்ப அனைவரும் ஆசைப்பட வேண்டும். நிறைவு மனதில் தான் இருக்கிறது என்று உணர்ந்து எளிமையாக வாழ வேண்டும்.* கடவுள் உண்டு, அவரைக் காண வேண்டும் என்று தாகத்துடன் வேண்டுபவர்களிடம் கருணை கொண்டு உருவத்துடன் காட்சி தருவார். அருவமாயினும் உருவம் கொள்வார்.- காஞ்சிப்பெரியவர்