நியாய வழி நடப்போம்
UPDATED : நவ 22, 2015 | ADDED : நவ 22, 2015
* எந்த செயலையும் அதற்குரிய முறையோடு தான் செய்ய வேண்டும். அதுவே நியாயமான வழியாகும்.* ஒவ்வொருவரின் பார்வைக்கும் நியாயம் வெவ்வேறானதாக தோன்றினாலும், பொது நியாயத்தைச் செய்வது நல்லது.* மனதில் கட்டுப்பாடு இருக்குமானால், நியாயவழி நடப்பதில் சிரமம் ஏதும் இருக்காது.* நல்ல மனிதர்களிடம் நட்பு வைத்துக் கொண்டால், நல்வழியில் நடக்க துாண்டுகோலாக இருக்கும்.* ஆசையும், வெறுப்பும் இல்லாமல் செய்யும் எந்த செயலும் நன்மையானதாகவே இருக்கும்.- காஞ்சிப்பெரியவர்