அளவறிந்து நடந்திடு
UPDATED : டிச 01, 2015 | ADDED : டிச 01, 2015
* எதிலும் அதன் அளவு அறிந்து நடந்தால் மன அமைதியுடன் வாழலாம்.* வாழ்வில் ஒழுக்கம் ஏற்பட்டு விட்டால், செய்யும் செயல் அனைத்திலும் நேர்த்தியும், ஒழுங்கும் உண்டாகும்.* நாம் நம்மால் முடிந்த நற்செயல்களைச் செய்து வந்தால் போதும். கடவுள் கைகொடுக்கத் தயாராக இருக்கிறார்.* தனக்காக மட்டும் மனிதன் வாழ்வது கூடாது. இயன்ற உதவிகளைப் பிறருக்குச் செய்ய வேண்டும்.* தானத்தில் சிறந்தது அன்னதானமே. இதில் மட்டுமே ஒருவரை முழுமையாகத் திருப்திப்படுத்த முடியும்.காஞ்சிப்பெரியவர்