உள்ளூர் செய்திகள்

ஜென்மம் முழுக்க படியுங்கள்

* சமூகப்பணியையும், தெய்வப்பணியையும் சேர்த்து செய்ய வேண்டும். ஒன்றை விட்டு ஒன்றைச் செய்வது சரியல்ல. தெய்வத்தின் ஒப்புதலுடன் தான் தேசப்பணியைச் செய்ய வேண்டும்.* நம்முடைய சாஸ்திரங்கள், புராணங்கள் தாய் மொழியிலும் சமஸ்கிருதத்திலும் இருப்பதற்குக் குறைவே இல்லை. அவற்றில் ஒரு ருசியை ஏற்படுத்திக் கொண்டால், நாளெல்லாம் படித்தாலும் போதாமல், ஜென்மம் முழுவதும் படித்துக் கொண்டு சந்தோஷமாக இருக்கலாம்.* ஒரு கணவன் கற்க வேண்டியதைக் கற்று முடிந்தவுடன், உலகத்தில் தர்மங்களை செய்ய பத்தினி என்ற துணையை சேர்த்துக் கொள்ள வேண்டும். அவளுடன் இணைந்து நற்பணிகளைத் தொடர வேண்டும்.* பூர்வ ஜென்மங்களில் வினையை விதைக்கிறோம், அதற்கு இறைவன் தருகிற பலனை, கஷ்டத்தை இப்போது அறுவடை செய்கிறோம். * பிறருக்கு உதவி செய்வதற்காக சொந்த விஷயத்தில் சிக்கனமாய் இருக்க வேண்டும் என்ற உயர்ந்த கொள்கையை கடைபிடித்தால் புண்ணியத்துக்குப் புண்ணியமும், நிம்மதியும் கிடைக்கிறது.- காஞ்சிப்பெரியவர்