உள்ளூர் செய்திகள்

நிஜமான லட்சுமி பூஜை

* ஒவ்வொருவரும் தினமும் பசுவுக்கு ஒரு பிடி புல் கொடுக்கவேண்டும். கால்நடைகள் விரும்பி உண்ணும் அகத்திக்கீரை, அருகம்புல் கொடுப்பது சிறப்பு. * வீட்டில் அன்றாடம் சமையலுக்கு நறுக்கும் காய்கறிகளின் தோலை வீணாக்காமல் மாடுகளுக்கு கொடுப்பது நல்லது. * பால்கறவை நின்று போன பசுக்களை அடிமாடாக விற்கக்கூடாது. உயிருள்ள வரை அவற்றைக் காப்பாற்றி வரவேண்டும்.* தன் கன்றுக்குட்டிக்கு வேண்டியது போக, உபரியாக மனிதர்களுக்கும் பாலைச் சுரக்கின்ற பசு நம்மைப் பெற்ற தாயாருக்குச் சமமானது.* பசுக்களை வதை செய்வது, கறிக்காகக் கசாப்புக்கடைக்கு போவது போன்ற கொடிய செயல்களைத் தடுக்க வேண்டியது நமது புனிதமான கடமை.* பசுப்பாதுகாப்பு என்பது உயிர்க்கருணை மட்டுமல்ல. அதுவே செல்வத்தை தந்தருளும் நிஜமான லட்சுமி பூஜையாகும்.- காஞ்சிப்பெரியவர்(இன்று மாட்டுப்பொங்கல்)