உள்ளூர் செய்திகள்

பொறுப்பாக நடந்து கொள்

* எதிலும் அலட்சியப் புத்தி கூடாது. தெரிந்த விஷயமாக இருந்தாலும் பொறுப்புடன் இருப்பது அவசியம்.* நல்ல விளைவை உண்டாக்கும் விதத்தில் உண்மை பேச வேண்டும். இல்லாவிட்டால் மவுனமாக இருப்பது சிறந்தது.* போட்டி மனப்பான்மை இருக்கும் வரையில் மனிதன் வாழ்வில் மனநிறைவு உண்டாவதில்லை.* சுவரில் எறிந்த பந்து மீண்டும் திரும்புவது போல, கோபம் புறப்பட்ட இடத்திற்கு வந்து தீங்கு செய்யும்.- காஞ்சிப் பெரியவர்