உள்ளூர் செய்திகள்

கடவுளின் திருவடியை நினை!

* மன அடக்கத்துடன் செயல்படுங்கள். பிறர் போற்றும்விதத்தில் எடுத்துக் காட்டாக வாழுங்கள்.* யாரையும் அலட்சியமாக எண்ணக்கூடாது. கடவுளின் அருட்குணங்களை நினைத்து நம்மால் முடிந்த உதவியை பிறருக்குச் செய்ய வேண்டும்.* தேவையை அதிகப்படுத்திக் கொண்டே சென்றால் பேராசை தான் மிஞ்சும். அப்போது மனநிம்மதி கானல் நீராகி விடும்.* வாழ்க்கை லாபநஷ்டக் கணக்கு பார்க்கும் வியாபாரம் அல்ல. பிறர் கஷ்டத்தை நம்மால் போக்க முடிந்தால் அதுவே பிறவிப்பயன்.* எந்த இடத்தில் இருந்தாலும், எந்த பணியில் ஈடுபட்டாலும் மனம் கடவுளின் திருவடிகளையே சிந்தித்துக் கொண்டிருக்கட்டும்.* மனதிலிருக்கும் அசுத்தத்தை அகற்றுங்கள். அது தானாகவே கடவுளின் பக்கம் திரும்பி விடும். * திருடுதல், வஞ்சித்தல், லஞ்சம் பெறுதல், உழைப்பை சுரண்டுதல் இவையேதும் இல்லாமல் நேர்மையான வழியில் உழைத்து சம்பாதிப்பதே நிலைக்கும். - காஞ்சிப்பெரியவர்