உள்ளூர் செய்திகள்

மனம் விட்டுப் பேசுங்கள்

* சத்தியத்தின் சொரூபமாக இருப்பவன் கடவுள். அவனது பாதங்களைப் சரணடைந்தால் வாழ்க்கையில் என்றும் இன்பமே.* பக்தர்கள் தம் இதயச் சிமிழில் பக்தி என்ற கம்பியை பூட்டிக் கொண்டு, சிரத்தை என்ற சுவிட்சைத் தட்டினால், அருவமான கடவுள் திவ்ய மங்கல ஜோதியாகத் தரிசனம் தருவார்.* சாந்தம் நிறைந்தவனோடு தொடர்பு கொண்டால் நமக்குள்ளும் சாந்தமாகிய அருட்பண்பு வளரத் துவங்கிவிடும்.* உண்மையாக இருக்கும் இறைவனின் மனோபாவத்துக்கு தக்கபடி, அன்போடு நமக்குப் பிரியமான எந்த வடிவத்திலும் வழிபாடு செய்யலாம்.* நம்மிடம் உள்ள ஆசை என்னும் விஷமத்தை நீக்கவே, இறைவன் நம் விருப்பங்களை நிறைவேற்றாமல் கட்டிப்போடுகிறான்.* கஷ்டங்களை உங்கள் மனதில் போட்டு வருத்திக் கொள்ளாதீர்கள், இறைவனிடம் மனம் விட்டு வெளிப்படையாகச் சொன்னால் தான் நிம்மதி பிறக்கும்.- காஞ்சிப்பெரியவர்