பெற்றோரின் கடமை
UPDATED : மே 04, 2016 | ADDED : மே 04, 2016
* ஒழுக்கம் உயிர் போன்றது. குழந்தைகளை ஒழுக்கத்துடன் வளர்க்க வேண்டியது பெற்றோரின் கடமை.* பெரும்பாலும் மனிதர்கள் ஆசை என்னும் பெயரால் அவசியமற்ற செயல்களில் ஈடுபடுகிறார்கள்.* கடவுளிடம் இருந்து நாம் பிரிந்து வந்திருக்கிறோம். பக்தி மூலம் மீண்டும் அவரிடம் ஒட்டிக்கொள்வோம்.* கோபத்தால் பிறருக்கு மட்டுமில்லாமல் நமக்கும் தீமையே உண்டாகிறது.* அலட்சியத்துடன் பணியாற்றுவது கூடாது. யாரையும் இழிவாகக் கருதுவதும் கூடாது.- காஞ்சிப்பெரியவர்