மனம் ஒரு பொக்கிஷம்
UPDATED : ஆக 11, 2016 | ADDED : ஆக 11, 2016
* கடவுளின் இருப்பிடமான மனம் மனிதனுக்கு கிடைத்த பொக்கிஷம். அது குப்பைத் தொட்டியாக இருப்பது கூடாது. அதைப் பாதுகாப்பது நம் கடமை.* உலகைப் படைத்த கடவுளுக்கு நன்றி செலுத்துவதற்காகவே கோவில் வழிபாட்டை முன்னோர்கள் ஏற்படுத்தி வைத்தனர்.* பக்தியும், சேவையும் மிகவும் முக்கியமானவை. இதில் ஒன்றால் மற்றொன்று பெருமை பெறுகிறது.* கடவுள் இசையின் வடிவமாக இருக்கிறார்.- காஞ்சிப்பெரியவர்