உள்ளூர் செய்திகள்

போதும் என்று நினையுங்கள்!

* உங்களுக்கு பிடித்தமான தெய்வத்தை வணங்கலாம். ஒரே தெய்வத்தை வணங்குவதால் மனம் ஒருமுகப்படும். * மற்றவர்கள் வணங்கும் தெய்வங்களை தாழ்வாக எண்ணுவது கூடாது.* கீழே விழுந்து தெய்வத்தை வணங்கும் காரணம் தெரியுமா? உடல் கூட தெய்வத்திற்குரியது தான் என்பதை உணர. இந்த உடல் எனக்குரியது என்ற அகந்தையை விட்டொழிக்க. * பெண்ணுக்கு சீதனமாக மாப்பிள்ளை வீட்டார் வரதட்சணை கேட்கக்கூடாது. பெண்ணைப் பெற்றவர்கள் விரும்பிக் கொடுத்தாலும் வாங்கக் கூடாது. * நமக்கு தேவையில்லாத பொருட்களை வாங்கக்கூடாது. நிம்மதியாக வாழ்வதற்காக தேவையான அளவு பணம் சம்பாதித்தால் போதும்.* ஆடம்பமாக வாழ்வது இன்றைய நடைமுறையாகி விட்டது. போதும் என்ற மனநிலையை அடைந்தால் இந்த நிலை மாறும். - காஞ்சிப்பெரியவர்