உள்ளூர் செய்திகள்

எந்த செயலுக்கு பலனுண்டு?

* மனம் இடைவிடாமல் எதை தீவிரமாகச் சிந்திக்கிறதோ, அதுவாகவே மாறிவிடும் தன்மை கொண்டது.* பிறருக்கு எடுத்துச் சொல்வதை விட எடுத்துக்காட்டாக வாழ்ந்து காட்டுவதில் தான் பெருமை இருக்கிறது.* மனிதன் எந்தநிலையில் இருந்தாலும் கடவுளின் அருட்குணங்களைக் கேட்பதை லட்சியமாகக் கொள்ள வேண்டும்.* பெரும்பாலும் கோபத்தினால் நமக்கு நாமே தீங்கு செய்து கொள்கிறோம். அதனால், கோபத்தை அறவே கைவிடுவது நல்லது. * கடவுளை நினைத்துச் செய்யும் எந்த செயலுக்கும் பலனுண்டு. அறியாமல் செய்தாலும் கூட அதற்கும் பலன் கிடைத்துவிடும்.* தர்மம், நீதி இரண்டும் சேர்ந்தது தான் பண்பு. பண்பில்லாதவன் மனிதநிலையிலிருந்து தாழ்ந்து விடுகிறான். * எந்த விஷயத்தையும் அலட்சியத்துடன் அணுகக்கூடாது. அக்கறையுடன் செய்யும் செயல் தான் வெற்றி பெறும்.- காஞ்சிப்பெரியவர்