பத்து நிமிஷமாவது வணங்குங்கள்
* கடவுள் நமக்கு உடல் கொடுத்ததோடு மட்டுமல்லாமல் இப்பரந்த உலகம், தேவையான உணவு, உடை ஆகியவற்றையும் தந்திருக்கிறார். அதனால், நாள்தோறும் அவருக்கு நன்றி செலுத்த வேண்டும். இதன் அடையாளமாகச் சிலர் உண்பதற்கு முன் கடவுளுக்கு நிவேதனமாக உணவைக் காட்டியபிறகு சாப்பிடத் துவங்குவர். * ஒவ்வொரு வீட்டிலும் மாலை நேரத்தில் விளக்கேற்றி, பத்து நிமிஷ நேரமாவது இஷ்ட தெய்வத்தின் மீது பஜனை செய்ய வேண்டும். வீட்டில் செய்யும் வழிபாடு நிலையான இன்பத்தை தரவல்லது.* இறைவனிடம் எதை எதையோ வேண்டுகிறோம். உண்மையில் வேண்டுவதாக இருந்தால், மனம் கண்டபடி அலையாமல், வைராக்கியத்தைக் கேட்டுப் பெறவேண்டும். அப்போது தான் மனம் திருந்தி புத்தியின் வழியில் செல்லும்.* நாம் எந்த தெய்வத்தை வழிபட்டாலும் தப்பில்லை. ஆனால், எல்லா தெய்வங்களும் ஒன்றே என்று புரிந்து கொண்டு வழிபடவேண்டும் என்பது தான் மிகவும் முக்கியம்.காஞ்சிப்பெரியவர்