முருகனை வணங்குவோம்
UPDATED : ஜன 20, 2013 | ADDED : ஜன 20, 2013
* தமிழ் தெய்வமான முருகன் கருணை மிக்க ஆறுமுகங்களும், பன்னிரண்டு கரங்களும் கொண்டு அடியார்களுக்கு வாரிவழங்கும் வள்ளலாக விளங்குகிறான். * வெற்றி வேலை வணங்கியவர்களுக்கு தீவினை அகலும். இதையே, 'வேலுண்டு வினையில்லை' என்னும் பழமொழியாக கூறினார்கள்.* ஆறுமுகனை தாங்கும் பேறு பெற்றது மயில். முருகனின் திருவடிகளைச் சுமக்கும் மயிலை வணங்குபவர்களுக்கு பயம் நீங்கும்.* உயிர்களை எமன் பாசக்கயிற்றால் கட்டி இழுப்பான். ஆனால், முருகனின் அடியார்களைக் கண்டால் அஞ்சுவான். * நம் இதயக்குகையில் முருகன் வீற்றிருக்கிறான். அதனால், அவனை 'குகன்' என்று போற்றுவர். * முதலும், முடிவும் எனப்படும் ஆதி அந்தமில்லாதவன் முருகன். அவனுடைய திருவடிகளைச் சரணடைந்தவர்களுக்கு இப்பிறவியில் நல்வாழ்வும், இனி பிறவாத முக்தி இன்பமும் உண்டாகும்.- வாரியார்(இன்று தைப்பூசம்)