உள்ளூர் செய்திகள்

பண்பு மிக்கவராக இருங்கள்

* அதிகாரம், அந்தஸ்து, பணம், பதவிக்காக பாவச்செயலில் ஈடுபடக்கூடாது.* இனிய சொல், ஈகை, மனத்துாய்மை இவையே மேன்மக்களின் இயல்புகள்.* மனிதன் பிறருக்கு உதவி செய்யும் போதும், உபதேசம் செய்யும் போதும் தன்னடக்கத்துடன் எளிமையாக இருக்க வேண்டும்.* நல்ல எண்ணம், சொல், செயல் மூன்றுமே ஒரு மனிதனுக்குப் புண்ணியத்தைக் கொடுக்கும்.* பழிச்சொல் இல்லாத பண்பு மிக்க வாழ்வே சிறந்தது.* யாரையும் இழிவாக எண்ணுவது கூடாது. கோபத்தில் பழிப்பதும் கூடாது. பொறுமை, கருணை இரண்டும் உங்களின் அணிகலன்களாகட்டும். -மகாவீரர்